shadow

புதிய தென்னிந்தியாவின் வரைபடம்: கட்சி கொடி குறித்து கமல் விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். ஆறு கைகள் இணைந்து நடுவில் ஒரு நட்சத்திரம் உள்ள இந்த கட்சியின் கொடிக்கு அவர் தனது உரையில் விளக்கம் அளித்தார்.

”கட்சியின் கொடியில் உற்றுப்பார்த்தால் புதிய தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். ஆறு கைகள் ஆறு மாநிலங்களைக் குறிக்கும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களாகிய நீங்கள்தான். மக்களையும் நீதியையும் மய்யமாகக் கொண்டு இணைக்கும் கட்சி என்பதால் மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

தராசின் நடுமுள் நாம். எந்தப் பக்கமும் சாயமாட்டோம். நீங்கள் வலதா, இடதா என்று கேட்கிறார்கள். அதனால்தான் கட்சியின் பெயரிலேயே மய்யம் என்று வைத்திருக்கிறோம்”

இவ்வாறு கமல் தனது கட்சிக்கு கொடிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply