ஓடிடி பிளாட்பார்ம்

கமல் எடுத்த அதிரடி முடிவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாமல் ஓடிடி பக்கம் சாய்ந்து வருகின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் திரையரங்க உரிமையாளர்கள் எச்சரிக்கை காரணமாக பல தயாரிப்பாளர்கள் ஓடிடியில் படத்தை விற்க தயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சூழலை பயன்படுத்தி ராஜ்கமல் நிறுவனர் கமல்ஹாசன் அதிரடி முடிவு செய்துள்ளார்

தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் வாயிலாக திரைப்படங்களை ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர்களிடம் அவர் போன் மூலம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் பல சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பார்ம் வாயிலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply