shadow

ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா? பரபரப்பு தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் அதிமுகவும் போட்டியிட போகிறது

இந்த நிலையில் கமல்ஹாசன் வரும் 23ஆம் தேதி தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.