காங்கிரஸ் கூட்டணியில் கமல்: மாநகராட்சி தேர்தலில் போட்டி?\\

திமுக காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதப்படும் நிலையில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த கூட்டணியை நீடிக்காது என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் ஒரு தனி கூட்டணி அமைக்க இருப்பதாகவும் அதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைப்பதால் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது

இந்தத் தேர்தல் மூலம் நகர்ப்புறத்தில் தங்கள் கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள கமல் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது

Leave a Reply