உலகநாயகன் கமல்ஹாசன் இன்ற தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரஜினி, மணிரத்னம், சுஹாசினி உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கமல் தனது பிறந்தநாளை சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் டைரக்டர் மணிரத்னம், அவரது மனைவி சுகாசினி, நடிகர்கள் ஆர்யா, தனுஷ் உள்ளிட்ட சில முக்கிய திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிறந்தவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணமாவில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே… என்று பாடி கவர்ந்தவர், பின் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படம் மூலம் ஹீரோவாக உயர்ந்தார். தொடர்ந்து பாலசந்தரின் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். நடிப்பு, நடனம், பாட்டு, இயக்கம், தயாரிப்பு என பன்முகம் கொண்ட கலைஞனாக, சகலகலா வல்லவராக, உலகநாயகனாக இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் கமல்.

கமல் தனது பிறந்தநாளை சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் டைரக்டர் மணிரத்னம், அவரது மனைவி சுகாசினி, நடிகர்கள் ஆர்யா, தனுஷ் உள்ளிட்ட சில முக்கிய திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கமல் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது, நாமக்கல் கமல் நண்பனி மன்றம் சார்பாக ஏழை பெண்களுக்கு 15 தையல் மிஷின்கள், மத்திய சென்னை ரசிகர்கள் சார்பாக மாற்றுத்திறனாளி இருவருக்கு மாற்றுத்திறனாளி சைக்கிள், வடசென்னை சார்பாக 15 ஆயிரம் நிதியுதவி, திருவண்ணாமலை ரசிகர்கள சார்பாக அனாதை குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான காலணிகள் வழங்கப்பட்டன.

பின்னர் கமல், தனது ரசிகர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டதோடு தனது விஸ்வரூபம்-2 படம் பற்றியும் அவர்களோடு சேர்ந்து கலந்துரையாடினார்.

உலகநாயகன் கமல் அவர்களுக்கு  சென்னை டுடே நியூஸ் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Leave a Reply