ரஜினி,அஜித், விஜய்யிடம் ஆதரவு கேட்ட கமல்:

பாரத இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது மார்ச் 22 ஆம் தேதி ஞாயிறு அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருக்குமாறு, சுய ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் இந்த யோசனைக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து டுவீட் செய்துள்ளார், அதில் நம் பிரதமரின் அழைப்புக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் அசாதாரணமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது நமக்கு ஏற்படும் ஒரு பேரழிவு, இதனை நாம் அனைவரும் ஒற்றுமையாகவும், வீட்டில் இருந்தபடி வெளியே எங்கும் செல்லாமல் இருப்பதன் மூலம், நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.

மேலும் கமல்ஹாசன் தனது டுவீட்டில் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, விக்ரம், தனுஷ் ஆகியோர்களையும் டேக் செய்து இந்த விஷயத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார். சுய ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு அளிக்குமாறு ரஜினி, அஜித், விஜய்யை கமல்ஹாசன் கேட்டுக்கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

Leave a Reply