கமல் அறிவித்த ரூ.1 கோடி நிதியுதவி: திரையுலகினர் ஆச்சரியம்!

கமல் அறிவித்த ரூ.1 கோடி நிதியுதவி: திரையுலகினர் ஆச்சரியம்!

கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே. இவர்களில் ஒருவர் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மறைந்த மூன்று பேர்களின் குடும்பத்திற்கு படக்குழுவினர் நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று சற்று முன்னர் அறிவித்துள்ளார்

படப்பிடிப்பு தளத்தில் மறைந்த மூன்று பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த கமல்ஹாசன் மற்றும் லைகா நிறுவனர் சுபாஷ்கரண் ஆகியோர் சற்றுமுன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்தனர். இதன் பின்னர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது ’படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தை தனது குடும்பத்தில் நடந்த விபத்தாகவே கருதுவதாகவும் சினிமாவில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை இந்த விபத்து உறுதி செய்வதாகவும் மறைந்த மூன்று பேரின் உடல்களுக்கு குடும்பத்தினர்களுக்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.