shadow

கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் பேச்சாளர்கள் அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21 ஆம் தேதி மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். ஒருபக்கம் இந்த கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் மாநில அரசையும், மத்திய அரசையும் டுவிட்டர் மற்றும் பேட்டிகளில் விஅம்ர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் வரும் மார்ச் 8 ஆம் தேதி சென்னையிலும் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியிலும் இக்கட்சியில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் 10 பேர் அடங்கிய மாநில பேச்சாளர்கள் யார் யார் என்ற பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், முரளி அப்பாஸ், கமிலா நாசர், பட்டிமன்ற பேச்சாளர் ஞான சம்பந்தன், ரங்கராஜன், ஆர்.ஆர்.சிவராமன், சவுரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் இந்த பட்டியில் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *