கமல், திமுக, தேமுதிக: உள்ளாட்சி தேர்தலில் புதிய கூட்டணியா?

வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்காது என்பதால் தேமுதிக அணி மாற தயாராக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் திமுகவும் தனது கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க முடிவு செய்து இருப்பதாகவும் அதன் அடிப்படையில்தான் நேற்று கமல்ஹாசனை முக ஸ்டாலின் சந்தித்துப் பேசியதாகவும், இந்த கூட்டணியில் தேமுதிக இணைய விருப்பம் தெரிவித்தால் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

எனவே திமுக கூட்டணியில் கமலஹாசன் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ஆனால் அதிமுக, திமுக கூட்டணிக்கு எதிராக கமல்-ரஜினி கூட்டணி அமைப்பார் என்ற ஒரு கருத்து ஏற்பட்டிருக்கும் நிலையில் திடீரென கமல் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்தால் கமல் கட்சி முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கும் என்றும் அதனால் கமல்ஹாசனின் இப்படி ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் திமுக கூட்டணியில் கமல் கட்சி சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply