இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் பாக்ஸ் ஆபீஸ் நிறுவனமும் இணைந்து ‘எங்கேயும் எப்போதும், ராஜா ராணி’ போன்ற வெற்றிப்படங்களை தயாரித்ததனர். தற்போது இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள அடுத்த படம் குக்கூ. பிரபல எழுத்தாளர் ராஜமுருகன் இயக்குனராக இந்த படத்தில் அறிமுகம் ஆகிறார்.

நாயகன், நாயகி இருவரும் பார்வையற்றவர்கள். இவர்களுக்குள் ஏற்படும் காதலை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.  இந்த விழாவில் கமல்ஹாசன், சூர்யா, மற்றும் கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், “சூர்யா என்னை அண்ணன் என்று சொன்னார். அவரை நான் கவனித்து வருகிறேன் என்றும் சொன்னார். அது எல்லாமே உண்மைதான். ஆனால், சூர்யா தனிமையில் இருக்கும்போது மட்டும்தான் அவருக்கு நான் அண்ணன். அவருடைய அப்பா சிவகுமாருடன் அவர் இருக்கும்போது நான் அவருக்கு சித்தப்பாவாகத்தான் இருப்பேன். பொதுவாக எனக்கு இரட்டை வேடங்களில் நடிக்க ரொம்பவும் பிடிக்கும். சூர்யா விஷயத்தில் நான் இரண்டு வேடத்தில் இருப்பது ரொம்பவும் மகிழ்ச்சி” என்று கூறினார். கமலஹாசனின் நகைச்சுவை பேச்சைக் கேட்டு சூர்யா உள்பட அனைவரும் சிரித்தனர்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1h4R17L” standard=”//www.youtube.com/v/jFK-EG9_5JM?fs=1″ vars=”ytid=jFK-EG9_5JM&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5916″ /]

 

Leave a Reply