shadow

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு கமல், ரஜினி ஆகியோர் தங்கள் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில அவர்கள் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்த்: என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

கமல்ஹாசன்: கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம்.