shadow

கமல், ரஜினி ஜெயிக்க முடியாது என்பதற்கு விஜயகாந்த் நல்ல உதாரணம்:

தமிழக அரசியலில் இனிமேல் நடிகர்கள் வெற்றி பெற முடியாது என்பதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சரியான உதாரணம் என்று நடிகரும் வேளச்சேரி எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் திமுக கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது:

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் அமர்ந்திருக்கிறார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. கம்பராமாயணத்தை சேக்கிழார் சிறப்பாக எழுதியிருக்கிறார் என்று பேசியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடியார். தமிழுக்கு அவமானம் அதிகரித்து, ஆபத்தாக வந்து கொண்டிருக்கிறது. எப்பவுமே தமிழைக் காக்கும் ஆட்சி, தி.மு.க-தான்.

படித்த இளைஞர்கள் பக்கோடா விற்றால் வருமானம் கிடைக்கும் என மோடி சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் துணை முதல்வரும், பிரதமர் மோடியும் டீ விற்றவர்கள். டீ விற்றவர்கள் நாட்டை ஆண்டால் ‘பக்கோடா’தான் விற்கச் சொல்வார்கள். இன்னும் சில காலம் போனால், செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் பரோட்டாவும் சால்னாவும் விற்கச் சொல்வார்கள். தமிழக அமைச்சர்கள் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் பேசுகிறார்கள். எடப்பாடி, பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பொம்மைகளின் நூல், மோடி கையில் உள்ளது. மோடி இழுக்கும் நூலின் அசைவுக்கேற்ப இந்த பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ’தெர்மக்கோல் ஆட்சி’ என்றால், டெல்லியில் ’பக்கோடா ஆட்சி’ நடந்துகொண்டிருக்கிறது.

இவர்களது துன்பம் தாங்க முடியவில்லை என்றால், சினிமா துறையிலிருந்து இன்னொரு பெருந்துன்பம் வந்துகொண்டிருக்கிறது. வயது இருக்கும் வரை ஆடித் தீர்த்துவிட்டு, புகழையும் பணத்தையும் சம்பாதித்துவிட்டு, வயதான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள். நானும் சினிமாவில் 40 ஆண்டுகாலம் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். கமலாக இருந்தாலும் ரஜினியாக இருந்தாலும், அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவங்கி முதலமைச்சர் ஆகிவிட முடியாது. நடிகர்கள் தனிக்கட்சி துவக்கி வெற்றிபெற்றுவிட முடியாது என்பதற்கு விஜயகாந்த்தான் முன் உதாரணம்.

கலைஞரின் மகனாக இருந்தும், அடிமட்டத் தொண்டனாக இருந்து, படிப்படியாக உழைத்து கட்சியில் பொறுப்புகளைப் பெற்று உயர்ந்தவர் ஸ்டாலின். அரசியலுக்கு வர விரும்பும் ரஜினியும் கமலும் தெளிந்த சிந்தனையோடு வர வேண்டும். பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வராதீர்கள். சினிமாவில், ஒரே பாட்டில் முன்னேறுவது போல அல்ல அரசியல். அது சினிமா. இது, நிஜ அரசியல்’ என்றார்.

Leave a Reply