உத்தம வில்லன் நஷ்டம்.. 8 ஆண்டுக்கு பின் கமல் எடுத்த அதிரடி முடிவு

கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான உத்தம வில்லன் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் லிங்குசாமிக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது

இந்த நிலையில் உத்தம வில்லன் படத்தின் நஷ்டத்திற்கு ஈடு செய்ய மீண்டும் லிங்குசாமிக்கு கமல்ஹாசன் ஒரு படம் நடித்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்

லிங்குசாமி தயாரிப்பில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை லிங்குசாமியே இயக்குவார் என்று கூறப்படுகிறது