shadow

ஆயுட்கால தலைவர் பதவி கிடைத்த மறுநாளே ராஜினாம செய்த சுரேஷ் கல்மாடி

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவர்களாக நேற்று நியமனம் செய்யப்பட்ட  சுரேஷ் கல்மாடி மற்றும் அபேங் சிங் சவுதாலா ஆகியோர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று இருவரும் ஆயுட்கால தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டதாக செய்தி வெளிவந்ததும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு பேரும் வாபஸ் பெற வேண்டும் இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

இந்நிலையில் சுரேஷ் கல்மாடி இன்று ஐ.ஓ.ஏ.யின் தலைவர் என். ராமச்சந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘என்னை ஆயுட்கால தலைவர் பதவிக்கு கலந்தாலோசித்ததற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு நன்றி கூறுகிறேன். எனினும், மரியாதைக்குரிய அந்த பதவியை பெற இது சரியான நேரம் என்று நான் கருதவில்லை’’ என்று கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் சவுதாலா, ‘‘என்னுடைய தேர்வுக்கு மிகவும் தெளிவானதாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த நேரம் வரை நான் இந்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை’’ என்றார்.

மேற்கண்ட இருவர் மீது  ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் விளையாட்டுத்துறை அமைச்சர் உள்பட பல உறுப்பினர்கள் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply