shadow

தினகரன் திடீரென சந்தித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

டிடிவி தினகரன் சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதில் இருந்தே அவரது அணிக்கு தாவ அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் முயற்சித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்று திடீரென கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு, தினகரனை சந்தித்து பேசி வருகிறார்.

இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர். இவர் தினகரனை சந்தித்துள்ளதால் இவரும் ஒரு ஸ்லீப்பர் செல்லா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னும் சில நிமிடங்களில் தினகரனும், கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவும் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாகவும், அப்போது இந்த சந்திப்பின் நோக்கம் தெரியவரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *