shadow

kanchipuramகாஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள நகரம். 2000 ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. ‘காஞ்சனம்‘ என்ற பெயரில் இருந்து மருவி காஞ்சி ஆனது. காஞ்சனம் என்றால் பொன்னாலான் நகரம் என்று பொருள். சங்க காலத்தில் புகழ்பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகரமாக கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியை பல்லவேந்திரபுரி என்று அழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரம் கடற்கரை கோயில், காஞ்சி கைலாசாநாதர் கோயில் ஆகியவை கட்டப்பட்டன. கி.பி.949க்குப் பின் பல்லவ ஆட்சிநிலை குலைந்தது. காஞ்சியை ராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான். பின்னர் காஞ்சி சோழ நாட்டின் ஒரு பகுதியானது. சோழர்காலத்தில் இதற்கு தொண்டை மண்டலம் என்று பெயரிடப்பட்டது. சோழர்களின் ஆட்சி 13ம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினர்.

பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப் பின்ஆட்சி புரிந்த விஜய நகரஆட்சியிலும் புதிய ஆலயங்கள் கட்டுதலும், ஆலயங்கள் விரிவுபடுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர் கோபுரம் கட்டி தந்தார். விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565ம் ஆண்டு வீழ்ச்சியுற்றது. விஜயநகர ஆட்சி வீழ்ந்த பின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. நாடு முழுவதும் இந்து கோயில்கள் சூறையாடப்பட்ட இருண்ட காலம். காஞ்சியிலும் அதன் எதிரொலியினால் வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவமூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன என்றுகூறப்படுகிறது.

மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் காஞ்சிபுரம் சீர்பெற்று திகழ்ந்தது. இவரிடம் இருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பின்கோல் கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரம் அவர்கள் வசமாயிற்று. 18ம் நூற்றாண்டில் ஆதிக்க வெறி கொண்டு ஆங்கிலேயர்கள் – பிரெஞ்சுக்காரர்களும் மோதிய போர்களால் செங்கல்பட்டு, காஞ்சிபுரமும் பலத் ததாக்குதல்களுக்கு உள்ளாயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார்.

இலக்கிய குறிப்பு:

காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகிறது. கி. பி4ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய காஞ்சிபுரம் கலை மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. முக்கியமாக சீனாவை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் யுவான்சுவாங் இங்கு பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின்படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்காஞ்சிநகரத்திற்குகவுதமபுத்தர்வருகைபுரிந்துள்ளார்.

கலை – கலாச்சாரம்:

இந்தியாவில் மொத்தம் 7 முக்கியஸ் தலங்கள் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரமும் ஒன்று. காஞ்சிபட்டுக்கு மட்டுமல்ல, கலை, கலாச்சாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாகவும் திகழ்ந்து வருகிறது. காஞ்சிபுரம்‘ ஆயிரம் கோயில் நகரம்‘ என்று அழைக்கப்படுகிறது. இது பஞ்ச பூதங்களில் ஒன்றாக விளங்கப்படுகிறது. ஒரு காலத்தில் பல்லவர்கள் தலை நகரமாக மகோன்னதச் சிறப்புகளுடன் இருந்த மாநகரம். இங்கு சுமார் ஆயிரம் கோயில்கள் கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சுமார் 100 கோயில்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. இங்கு தெற்கு விஷ்ணு காஞ்சி, வடக்கே சிவகாஞ்சி – இப்படி இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தநகரம் சிவகாஞ்சியில் சிவன் கோயில்கள் அதிகம். விஷ்ணு காஞ்சியில் வைணவ கோயில்கள் அதிகம். இது கோயில்களுக்கு சிறப்பு பெற்ற ஊராகும். பல்லவர், சோழர், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் உள்ளன. காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப்பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

கைலாசநாதர் கோயில்

இந்த கோயில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். இந்த கோயில் பல்லவ மன்னன் ராஜசிம்ம பல்லவமன்னரால் கட்ட தொடங்கப்பட்டு அவரது மகன் மகேந்திரவர்ம பல்லவரால் களிம்பினால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயில் கைலயநாதர் (சிவன்) கோயிலாகும். சிற்பகலைக்கு புகழ்பெற்ற கோயில். சோழமன்னன் ராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோயிலை கட்டும் ஆசை இக்கோயிலை கண்ட பிறகுதான் வந்ததாக கூறப்படுகிறது. கோயிலின் சுற்றுச்சுவர் முழுவதும் கருங்கற்களால் ஆன சிற்பங்களும், கோயிலின் உள்ளே சுடுமண் சிற்பங்களும் காணப்படுகின்றன.

வரதராஜ பெருமாள் கோயில்

காஞ்சியில் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட வைணவத் திருக்கோயில்களில் மிகச் சிறப்பு கொண்டது. இக்கோயிலில் 108 திருப்பதிகளில் ஒன்று. இது ஏறக்குறைய 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் அரசர்களால் கட்டப்பட்டதாகும். ஐந்து பிரகாரங்களும், இருபெரும் கோபுரங்கள் உள்ளன. நான்கு மூலைகளிலும் ஒரேகல்லில் உருவாக்கப்பட்ட சங்கிலிக் கோர்வை தொழில் நுட்பத்துடன் வியத்தகு முறையில் அமைந்துள்ளன.
 
ஏகாம்பரநாதர் கோயில்

ஏகாம்பரேஸ்வரர் கோயில் பஞ்ச பூதஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்த தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தை குறிக்கிறது. இந்த கோயிலின் முக்கிய கடவுள் சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் 600ம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு உள்ள சிவபெருமானை பிருத்விலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply