shadow

kakki sattaiபொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் திடீரென ஜனவரி 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதால் ஷங்கரின் ‘ஐ’ மற்றும் விஷாலின் ஆம்பள மட்டுமே தற்போதைய நிலையில் பொங்கல் ரேஸில் இருக்கின்றது. இந்நிலையில் அஜீத் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதால் மேலும் சில படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் நடித்த‘காக்கி சட்டை’ இறங்கும் என கூறப்படுகிறது. தற்போது காக்கி சட்டை படம் சென்சாருக்கு அனுப்ப படக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதாலும் சென்சார் ஆகி முடிந்ததும் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் எதிர்பாரா விதமாக ‘டார்லிங்’ படத்தின் போஸ்டர்களில் படம் விரைவில் என விளம்பரமாகியுள்ளது. இதனால் ‘டார்லிங்’ படமும் பொங்கலுக்கு வெளியாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்போதும் இல்லாத வருடமாக இந்த வருடம் தான் பொங்கல் ரிலீஸில் கடைசி நிமிடம் வரை உறுதியில்லாத நிலை நிலவுகிறது என்றே கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply