சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய்-சூர்யா நாயகி

சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய்-சூர்யா நாயகி

kajalஇளையதளபதி விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களிலும் சூர்யாவுடன் ‘மாற்றான்’ படத்திலும் நடித்த பிரபல நடிகை காஜல் அகர்வால், சிம்புவின் அடுத்த படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு தயாராகிவிட்டார். ‘வாலு’ இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சிம்பு நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் விஜய்சந்தர் இயக்கவுள்ள படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், காஜல் அகர்வாலும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், சம்பளம் மற்றும் கால்ஷீட் தேதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply