shadow

வயதான இயக்குனருக்கு ஜோடியாகிறார் காஜல் அகர்வால்

motta1‘காஞ்சனா 2’ வெற்றி படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். முதலில் இந்த படத்தில் லாரன்ஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி அவர் இந்த படத்தில் அவர் வயதான டான் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியாகியது.

இந்நிலையில் இந்த படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வயதான கேரக்டராக இருந்தாலும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை ஆக்சன் மற்றும் நகைச்சுவை கலந்து லாரன்ஸ் எடுக்கவிடுக்கிறார். மேலும், இப்படத்தில் மக்களுக்கு நல்லதொரு மெசேஜும் சொல்லப்போவதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவை சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

shadow

Leave a Reply