shadow

விஜய்யின் அடுத்த படத்தில் நயன்தாராவா? காஜல் அகர்வாலா?

kajalவிஜய் நடித்து முடித்துள்ள ‘பைரவா’ படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் விஜய்யின் 61வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராதான் நடிப்பார் என பல ஊடகங்கள் கூறிவந்த நிலையில் தற்போது படக்குழுவினர் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்-காஜல் அகர்வால் கெமிஸ்ட்ரி ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஜில்லா’ படங்களில் நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருந்ததால் மீண்டும் இந்த ஜோடி இணைய வேண்டும் என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விரும்புகிறது.  ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் நடிக்க நயன் தாராவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply