உள்ளாட்சி தேர்தல் ரத்து: அதிரடியாக அறிவித்து தேர்தல் ஆணையம்

tamilnadu election commsion

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகள் உள்ளன. இதில் 3 வார்டுகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியாக இருந்ததால் அந்த மூன்று வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனால் இந்த 3 வார்டுகளிலும் சுயச்சை வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். ஆனால் அந்த 3 வார்டுகளில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும் புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.