shadow

விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் தயாரிக்கும் திரைப்படம்

இளையதளபதி விஜய் ரசிகர்கள் இணைந்து ‘3 ரசிகர்கள்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் இணைந்து ‘தல போல வருமா’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர்.

அஜித்தின் ரசிகர் கேஎம் தேஜாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை அஜித் ரசிகர்களான சுராஜ் என்பவர் இயக்க இந்த படத்திற்கு குணசீலன் ஒளிப்பதிவு செய்கிறார், மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் ‘வேதாளம்’ படத்தில் நடித்த கபீர்சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அனேகமாக இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிறப்புத்தோற்றத்தில் தோன்ற அஜித்திடம் அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply