shadow

‘கபாலி’யில் தன்ஷிகா-ரித்விகாவுக்கு என்ன கேரக்டர். இதுவரை வெளிவராத தகவல்

dhanshikaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் வெளியாக இன்னும் ஒருநாள் கூட இல்லாத நிலையில் இந்த படத்தின் வசூல், பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, மற்றும் ரித்விகா ஆகிய மூன்று பவர்புல் பெண் கேரக்டர்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவற்றில் ராதிகா ஆப்தே கேரக்டர் ரஜினியின் மனைவி கேரக்டர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தன்ஷிகா மற்றும் ரித்விகா கேரக்டர்கள் என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்துள்ளதாக கூறப்பட்டாலும் அது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியின் ஒரிஜினல் மகள் ரித்விகாதான் என்றும் இந்த சஸ்பென்ஸ் கிளைமாக்ஸில் டுவிஸ்ட் ஆக வருவதாகவும் தன்ஷிகா கேரக்டர் என்ன என்பது ஆடியன்ஸ்களுக்கு தெரிய வரும்போது அது மிகப்பெரிய திருப்பமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

Leave a Reply