shadow

ரஜினி ரசிகர்களின் அதிருப்தியால் ‘கபாலி’ கிளைமாக்ஸ் மாற்றமா?

kabali climaxசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடித்த ‘கபாலி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று ஓடி வருகிறது. படத்தின் திரைக்கதை ஸ்லோவாக இருப்பதாக ஒரு சிலரும், ரஜினியின் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய படம் என்று ஒருசிலரும் விமர்சித்து வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைவரும் கூறும் ஒரு குற்றச்சாட்டு கிளைமாக்ஸில் ரஜினியின் முடிவுதான்.

இந்த படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் கோஷ்டிகள் அனைவரையும் சுட்டுத்தள்ளிய பின்னர் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் ‘கபாலி’யை அவருக்கு நெருக்கமான ஒருவரே சுட்டு கொல்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸை ரஜினி ரசிகர்கள் உள்பட யாருமே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே தயாரிப்பாளர் திடீரென படத்தின் கிளைமாக்ஸை மாற்ற உத்தரவிட்டதாகவும், தற்போது திரையிடப்பட்டு வரும் கிளைமாக்ஸில் ரஜினி இறுதியில் போலீசில் சரண் அடைவது போன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply