shadow

ஷங்கரின் ‘ஐ’ வாழ்நாள் சாதனையை 4 நாட்களில் முறியடித்தது கபாலி
i-and-kabali
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் டீசர் கடந்த ஞாயிறு அன்று வெளியாகியது. இந்த டீசர் மூன்றே நாட்களில் ஒருகோடி பார்வையாளர்களை பெற்று யூடியூ இணணயதளத்தையே அதிர வைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படத்தின் டீசர் கடந்த ஒன்றரை வருடங்களில் பெற்ற 11.3 மில்லியன் பார்வையாளர்களை ‘கபாலி’ டீசர் வெறும் 4 நாட்களில் முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி நாள்தோறு ‘கபாலி’ டீசருக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பதால் இன்னும் பல சாதனையை ‘கபாலி’ டீசர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சூப்பர்ஸ்டார் நாங்கள்தான் என்று பலர் போட்டியிட்டு வரும் நிலையில் 60வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் ரஜினி ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த படத்தின் டீசர்.

Leave a Reply