ரஜினியின் ‘காலா’ டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

ரஜினியின் ‘காலா’ டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் டீசர் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தனுஷ் தனது டுவிட்டரில் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீசரில் ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல….ல ? பாப்பீங்க!!! என்ற வசனம் இருப்பதாகவும், தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

‘கபாலி’ படத்தின் டீசரில் ‘நான் வந்துட்டேன்னு’ சொல்லு என்ற வசனம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது போல ‘காலா’ டீசரில் இந்த வசனம் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply