shadow

ஜூன் 7ல் ‘காலா’ ரிலீஸ்: டுவிட்டரில் தனுஷ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கான்வே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் மாற்றி அமைக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

இதன்படி நேற்றிரவு தனுஷ் தனது டுவிட்டர் ‘காலா’ திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் இன்று முதல் தொடங்கும் என்றும் வெகுவிரைவில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், நானா படேகர், சமுத்திரக்கனி, ஹூமோ குரேஷி, சம்பத்ராஜ், அர்விந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply