shadow

சந்திரமுகி’யை அடுத்து மீண்டும் பேய் வேடத்தில் ஜோதிகா?

jothikaசமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ’36 வயதினிலே’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி பெரும் வெற்றியை கொடுத்ததால், ஜோதிகா தன்னுடைய நடிப்பை தொடரலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நல்ல கேரக்டருக்காக காத்திருந்த ஜோதிகாவுக்கு ராகவா லாரன்ஸ் கூறிய ஒரு கேரக்டர் மிகவும் கவர்ந்ததாகவும், அதனால் ராகாவா லாரன்ஸ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

காஞ்சனா 2′ படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கவுள்ள ‘நாகா’ என்ற படத்தில் ஜோதிகா பேய் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த கேரக்டர் சந்திரமுகி கேரக்டர் போன்று முக்கியத்துவம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக ஜோதிகாவுக்கு ஒரு பெரிய தொகையை லாரன்ஸ் தயாரிப்பாளரிடம் இருந்து பெற்று தந்துள்ளதாகவும், அந்த தொகை தற்போது முன்னணியின் இருக்கும் நடிகைக்கு சமமானது என்றும் தெரியவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சந்திரமுகி ஜோதிகாவை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்களே தயாராகுங்கள்….

Leave a Reply