shadow

ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

பிரபல நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் ’36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். அதன் பின்னர் அவர் நடித்த மகளிர் மட்டும், நாச்சியார் ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏற்கனவே ஜோதிகா நடித்த ‘மொழி’ படத்தை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

பொஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படட்தில் ஜோதிகா திருமணமான, நடுத்தர வயதுப் பெண்ணாகவும், ரேடியோ ஜாக்கி ஆகவும் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply