திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே 29ஆம் தேதி ஒடிடி பிளாட்பாரத்தில் அதாவது அமேசான் ப்ரைம் டைமில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெங்குவின்’ என்ற திரைப்படம் மே மாதம் 19 ம் தேதியே ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒடிடி பிளாட்பாரத்தில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை கீர்த்தி சுரேஷின் ‘பெங்குவின்’ படம் முந்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி நிலையில் தற்போது இரண்டு மொழிகளிலும் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்த சகுந்தலா தேவி என்ற கணித மேதையின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் ஒடிடி பிளாட்பாரத்தில் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முன்னணி நடிகர் நடிகைகளின் படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருப்பதால் நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply