shadow

ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் அக்காள் தம்பியாக நடிக்கின்றார்களா?

’36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’ படங்களை அடுத்து நடிகை ஜோதிகா பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவும், ஜி.வி.பிரகாஷூம் அக்கா-தம்பியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் மறுத்துள்ளார். ஆனாலும் இந்த படத்தில் இருவர்களது கேரக்டர்கள் என்ன என்பது குறித்து கூற அவர் மறுத்துவிட்டார்

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ‘லிங்கா’ பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply