மக்காத மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாக பேக் செய்யப்படும் உருளை கிழங்கு சிப்ஸ், வேப்பர்ஸ், குர்க்குரே மற்றும் பிற ஜங்க் ஃபுட்  உணவுகளை விற்க இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது. ஆனால்

குடிநீர் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை.

ஏற்கனவே அம்மாநில அரசால் இது போன்ற பொருட்களை விற்க, தயாரிக்க மற்றும் சேமிக்க தடை விதிக்கப்பட்டது. ஜூன் 26ம் தேதி இந்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து அம்மாநிலத்தில் ஜங்க் ஃபுட் வகைகளை விற்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்களால் அம்மாநில ஐகோட்டில் மனு தாக்கல் செய்யபப்ட்டது.

அந்த மனு நீதிபதிகள் ராஜீவ் சர்மா மற்றும் வி.கே. சர்மா அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ’ஜங்க் ஃபுட்’ களை விற்க தடை விதித்துள்ளனர்.

மேலும், சமையல் எண்ணெய் / டால்டா போன்றவற்றையும் பிளாஸ்டிக் பேக்குகளில் விறபனை செய்வதை தடைசெய்யப்படும் என்று அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply