shadow

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தனது பெயரை கெடுத்து கொண்டவர்களில் ஒருவர் ஜூலி என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜூலி தன்னுடைய காதலர் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பிக்பாஸ் ஜூலி கடந்த சில ஆண்டுகளாக மனிஷ் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென தனது காதலர் மனிஷ் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் மனிஷிடம் விசாரணை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.