shadow

பிக்பாஸ் வின்னர் ஜூலி தான்: பிரபல நடிகரின் டுவீட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ என்று கூறப்பட்டு வந்தாலும் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் கூறியபடி பங்கேற்பாளர்கள் மிக அருமையாக நடித்துவருவதாகவே பெரும்பாலானோர் கூறி வருகின்றனர்.

தொலைக்காட்சி நாடகம் போல் போய்க்கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராளியான ஜூலியை காயத்ரி மற்றும் நடிகை ஆர்த்தி மாறி மாறி டார்ச்சர் செய்தனர். காயத்ரி இந்த குழுவின் தலைவர் என்பதையே மறந்து ஜூலியை வெறுப்பேற்றும் வகையில் மாறி மாறி கேள்வி கேட்டதால் ஒரு கட்டத்தில் கதறி அழுத ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்தார்

இந்த நிலையில் காயத்ரி மற்றும் ஆர்த்தியின் டார்ச்சர் ஜூலியை இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாற்றிவிடும் என்று பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply