தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது யார் என்று தெரியாத எல்லாம் தமிழச்சியா ஜூலி!

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது யார் என்று தெரியாத எல்லாம் தமிழச்சியா ஜூலி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நாயகியாக கருதப்பட்டவர் ஜூலி. அனைத்து ஊடகங்களிலும் அவரை வீரமுள்ள தமிழச்சி என்றே வர்ணித்தன. ஆனால் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் என்று ஜூலி கூறினார். அப்படியென்றால் மனோன்மணியம் சுந்தரலிங்கனார் யார் என்பதே இன்று நெட்டிசன்களில் கேள்வியாக உள்ளது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது, தமிழ் சரியாக தெரியாத நமீதா கூட ஓரளவு தன்னால் முடிந்தவரை சரியாக பாடினார். ஆனால் சுத்தமான தமிழச்சி என்று வர்ணிக்கப்பட்ட ஜூலி தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு முன் ஒரு சிற்றுரையாற்றினார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாட கற்றுக்கொடுத்த பள்ளிக்கு நன்றி கூறியதோடில்லாமல், மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தாயுமானவர் எழுதியதாக கூறினார்.

இதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது கூட யார் என்று தெரியாத இவரையா வீரத்தமிழச்சி என்று அழைத்தோம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.