ஜோதிகாவின் ‘நாச்சியார்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமீபத்தில் வெளியான ஜோதிகா நடித்த ‘நாச்சியார்’ படத்தின் டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த டீசரில் இடம்பெற்ற ஒரு கெட்ட வார்த்தைக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புதெரிவித்ததோடு பாலா, ஜோதிகா மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன
இந்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த சில நிமிடங்களில் இந்த படம் வெளியாகும் திரையரங்குகளில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது.
பாலாவின் இயக்கத்தில் அவருடைய பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் நடித்துள்லனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஈஸ்வர் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.