ஜோஸ் பட்லர் அதிரடி சதம்: இலங்கைக்கு 164 இலக்கு!

இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் அபாரமாக சதம் அடித்ததை அடுத்து இலங்கை அணிக்கு 164 என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 35 ரன்களுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டது. ஜேசன் ராய், மலன் மற்றும் பெயர்ஸ்டோ ஆகியோர் மிகக் குறைந்த ரன்களில் அவுட்டான நிலையில் ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் மோர்கன் ஆகியோர் நின்று விளையாடினார்கள்

இதில் ஜோஸ் பட்லர் 67 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் என 101 ரன்கள் அடித்தார் என்பதும் கேப்டன் மோர்கன் 40 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்னும் சில நிமிடங்களில் 164 என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது