ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் நாடாளுமன்றத்தில் வேலை: வாய்ப்பை மிஸ் செய்யாதீர்கள்

ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் நாடாளுமன்றத்தில் வேலை: வாய்ப்பை மிஸ் செய்யாதீர்கள்

நாடாளுமன்றத்தின் மக்களவை செக்ரட்டேரியேட்டில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது

நாடாளுமன்ற மியூசியம் சேவையில் கியூரேட்டோரியல் உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கியூரேட்டோரியல் உதவியாளர்:

கல்வித் தகுதி: வரலாறு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம். தற்கால இந்திய வரலாறு பாடம் . அல்லது இளநிலை வரலாறு பட்டம் அல்லது முதுநிலை மியூசியாலாஜி பட்டம் இருக்க வேண்டும்.

அனுபவம்: 1 வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும். முதுநிலை படித்தவராக இருந்தால், 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்

பாதுகாப்பு உதவியாளர்:

கல்வித்தகுதி: வேதியியல் பாடத்தில் இளநிலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம்

தொழில்நுட்ப உதவியாளர்:

கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சைன்ஸ் பாடத்தில் இளநிலைப் பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம்

வயது: 27க்குள்

மாதச்சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை

இந்த பணிகள் குறித்த மேலும் விபரங்களுக்கு http://loksabhadocs.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Leave a Reply