ரஜினி இதைத்தான் அன்றே சொன்னார்: ஜே.என்.யூ வன்முறையை கண்டிப்பவர்கள் கவனிக்க!

வன்முறை தீர்வாகாது என்று ரஜினி சொன்ன போது எப்படிச் சொல்லலாம் என்று கோபமாகத் திட்டி உள்நோக்கத்தோடு ரஜினி அவர்களை விமர்சனம் செய்தவர்கள் இன்று ஜே.என்.யூ வன்முறைக்குக் காந்தி-அகிம்சை என்று வசனம் பேசுகிறார்கள் என்றும், வன்முறை எதற்கும் தீர்வாகாது ஆகவும் கூடாது. ரஜினி சொன்னதை இன்றும் வழிமொழிகிறேன் என்றும் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆயிரம் ஆண்டுகள் போராட்டம் நடத்தினாலும் அதனால் எதுவும் ஆகப்போவதில்லை. இது அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும். உண்மையில் குடியுரிமை சட்டம் ரத்தாக வேண்டுமென்றால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டத்தை ரத்து செய்வதாக இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தி ரத்து செய்யலாம். அதை தவிர வேறு வழியில்லை.

எனவே மாணவர்கள் அரசியல்வாதிகளின் பொய்யான ஆவேச பேச்சுக்களை நம்பி தங்களுடைய பொன்னான கல்லூரி காலத்தை வீணாக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply