shadow

காஷ்மீர் எல்லையில் பிடிபட்டது பாகிஸ்தான் உளவு புறாக்களா? அதிர்ச்சி தகவல்

1கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகே உள்ள சிம்பால் என்ற இடத்தில் இந்திய ராணுவ நிலை அருகே பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த சாம்பல் நிற புறா ஒன்று எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது. அந்த புறாவின் கால்களில் உருது மொழியில் எழுதப்பட்ட ஒரு மிரட்டல் கடிதம் இணைக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முகவரிக்கு பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒன்றாக இணைத்து பறக்கவிடப்பட்ட 2 மஞ்சள் நிற பலூன்கள் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் தினாநகர் பகுதியில் உள்ள கெசால் என்ற பகுதியில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் காரணமாக புறா விஷயத்தில் இந்திய ராணுவம் விழிப்புடன் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திற்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட புறாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த புறாக்களை கடத்தி வந்த 2 பேர்களை கைது செய்த போலீசார் பறிமுதல் செய்த புறாக்கள் வித்தியாசமான இளஞ்சிவப்பு அடையாளங்களுடன் சந்தேகப்படும்படியான வளையங்கள் மாட்டப்பட்டிருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நடக்கும் விஷயங்களை உளவு பார்த்து பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு தகவல் தெரிவிக்க இந்த புறாக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த ஜம்மு துணை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply