shadow

ஜியோ தயாரித்துள்ள 5ஜி ஸ்மார்ட்போன்: முக்கிய தகவல்கள்

இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை தயாரித்து உள்ளதாகவும் இந்த போன்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் ரிலையன்ஸ் வருடாந்த பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

இந்த போன் எட்டாயிரம் ரூபாய் பத்தாயிரம் வரை இருக்கும் என்றும் இதில் 5 அம்சத்துடன் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த போனில் 4ஜிபி ரேம் , ஸ்னாப்டிராகன் 480+ SoC சிப் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அம்சத்தில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

5,000mAh பேட்டரி மற்றும் 13 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வரும் என்றும், 8 மெகாபிக்சல் செல்பி கேமிரா இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.