ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கியிருக்கும் ஜில்லாவில் விஜய், மோகன்லால், பூர்ணிமா, காஜல் அகர்வால், மகத் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

நாளை ஜில்லா படத்தின் பாடல்களை வெளியிடுகிறார்கள். 25 ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தில் படத்தின் டீஸரை வெளியிடுகின்றனர்.

ஜில்லாவின் போட்டி படமான வீரத்தின் இரண்டு டீஸர்களை வெளியிட்டு அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சிவா. விஜய் ரசிகர்களுக்கு டீஸரை திருநாளில் தந்து அசத்தப் போகிறது ஜில்லா டீம். பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ல் படம் வெளியாகிறது.

Leave a Reply