அம்பானி பட இயக்குனர் படத்தில் நயன்தாரா

jeeva and nayantharaரவி.கே.சந்திரன் இயக்கிய “யான்” படத்தை அடுத்து நடிகர் ஜீவா, தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ராம்நாத் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கருணாஸ் நடித்த ‘அம்பாசத்திரம் அம்பானி’ படத்தை இயக்கிய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து  திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக ராம்நாத் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனநாதன் இயக்கத்தில் வெளியான ‘ஈ’ படத்திற்கு பின்னர் ஜீவா-நயன்தாரா எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply