நடிகர்கள் என்ன போராடவா முடியும்? டெல்லி கலவரம் குறித்து ஜீவா கேள்வி

நடிகர்கள் என்ன போராடவா முடியும்? டெல்லி கலவரம் குறித்து ஜீவா கேள்வி

சமுதாய பிரச்சினைக்காக நடிகர்கள் போராடினாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்

நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படம் இன்று திரைக்கு வர உள்ள நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது

டெல்லியில் நடைபெற்ற கலவரம் அரசியல் ரீதியானது என்பதால் என்னால் அதைப் பற்றி கருத்து கூற முடியவில்லை. ஆனால் ஒரு திரைப்படத்தில் அதைப் பற்றி என்னால் கூற முடியும். ஒரு கலைஞனால் என்னால் இதை மட்டும்தான் செய்யமுடியும்

ஒரு பெயிண்டர் தன்னுடைய கருத்தை ஓவியம் மூலம் தனது கருத்தை தெரிவிப்பது போல் நடிகராகிய நாங்கள் எங்களுடைய படங்கள் மூலம் தான் இதை தெரிவிக்க முடியும். நடிகர்கள் என்ன களத்தில் இறங்கி போராடவா முடியும்? அப்படியே போராடினாலும் அதற்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா? நீங்கள் அதனை வீடியோ எடுத்து உங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் போட்டுக்கொண்டு விளம்பரம் தேடத்தான் பார்ப்பீர்கள்’ என்று பத்திரிக்கையாளர்களை நோக்கி அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply