ஜார்கண்ட் தேர்தல்: கருத்துக்கணிப்பின்படி ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்?

ஜார்கண்ட் தேர்தல்: கருத்துக்கணிப்பின்படி ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்?

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படுகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஒருசில கருத்துக்கணிப்புகள் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இன்றி தொங்கு சட்டசபை அமையும் என கூறப்பட்டது. ஆனால் ஒரு கருத்துக்கணிப்பு கூட பாஜக வெற்றி பெறும் என்று கூறவில்லை

இந்த நிலையில் கருத்துக்கணிப்பின்படி இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published.