ஜார்கண்ட் தேர்தல்: மீண்டும் காங்கிரஸ் முன்னிலை!

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், காலையில் காங்கிரஸ் முன்னிலையிலும் அதன் பின்னர் திடீரென 9 மணிக்கு மேல் பாஜக முன்னிலையிலும் இருந்தது

இந்த நிலையில் தற்போது மீண்டும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 43 இடங்களிலும் பாஜக கூட்டணி 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகள் போதும் என்பதால் தற்போது முன்னிலையில் இருக்கும் இடங்களில் வெற்றி பெற்றாலே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply