shadow

அமெரிக்க நடிகை ஜெசிக்கா 3வது முறையாக கர்ப்பம்

பிரபல அமெரிக்க நடிகையும் தொழிலதிபருமான ஜெசிக்காவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.

இந்த தகவலை ஜெசிக்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். 36 வயதான ஜெசிக்கா தன்னுடைய இரண்டு மகள்களுடன் 3 என்ற எண் கொண்ட ஒரு பலகையை அவர் கையில் பிடித்து சூசகமாக 3வது குழந்தை குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு கேஷ்வாரன் என்பவரை ஜெசிக்கா திருமணம் செய்தார். ஜெசிக்காவின் மூத்த மகள் ஹானருக்கு ஒன்பது வயதும், இளையமகள் ஹாவேனுக்கு ஐந்து வயதும் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply