வரும் பிப்ரவரி 6ஆம் தேதி காலியாக உள்ள மாநிலங்கள் அவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களின் பெயர்களை இன்று காலை அறிவித்துள்ளார்.

அதன்படி முத்துக்கருப்பன், என்.சின்னத்துரை, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த் ஆகியோர் அதிமுகவின் சார்பில் போட்டியிடுவர். இதில் முத்துக்கருப்பன் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர். நெல்லை மாவட்ட அதிமுக மகளிர் அணிச்செயலாளராக இருப்பார் விஜிலா சத்தியான்ந்த், இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளராக இருப்பவர் சின்னத்துரை,  மற்றும் அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக இருப்பவர் சசிகலா புஷ்பா. ஒரு தொகுதியில் மார்க்கிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய எம்.எல்.ஏக்களின் பலத்தின்படி அதிமுகவுக்கு ஐந்து மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும். அதனால் நான்கு அதிமுக வேட்பாளர்களும், ஒரு மார்க்கிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Leave a Reply