மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் சமையல் எரிவாயு நேரடி மானியத்தை அமல்படுத்தக்கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு மானியத்திட்டத்தில் உதவி தொகை வழங்கப்படும் என சமீபத்தில் அரசு அறிவித்தது. அதற்கான செயல்பாடுகளிலும் இறங்கியது. தற்போது சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை திருச்சி, புதுக்கோட்டை, அரியலூரில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது . தமிழகத்தின் கவலைகளை தெரிவித்த பிறகும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. மாநில அரசுகளை தகுந்த முறையில் ஆலோசிக்காமல் நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் ஜெயலலிதா அந்த கடித்தத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply