shadow

ஓய்வு நான் அறியாதது. இறைவனின் அருளால் விரைவில் வீடு திரும்புவேன். ஜெயலலிதா அறிக்கை

jayalalithaகடந்த செப்டம்பர் 28ஆம் தேதி உடல்நலமின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாட்களுக்கு பின் இன்று தமிழக மக்களுக்கு தனது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மூன்று தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘அதிமுகவின் வெற்றியை தனது வெற்றியாகக் கருதி ஓட்டளிக்க வேண்டும். மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன். இறைவனின் அருளால் விரைவில் வீடு திரும்புவேன். சீக்கரமே முழு உடல்நலம் பெற்று வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன். ஓய்வு நான் அறியாதது, உழைப்பு என்னை நீங்காது. மக்களின் அன்பு இருக்கும் வரை எனக்கு எந்த குறையும் இல்லை’

அன்பு மிகுதியால் கழகத்தினர் சிலர் உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிக்கிறது. வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அதிமுகவினரின் உழைப்பு விசுவாசமும் பயன்பட வேண்டும்.

‘வாக்காளர்களை நேரில் சந்திக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. எண்ணமும், இதயமும் மக்களுடனேயே இருக்கிறது.’ என்று முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். முதல்வரின் முழு அறிக்கை இதோ:

1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *